தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் நேற்று திருகோணமலை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு , ஒரு தடைசெய்யப்பட்ட வலை மற்றும் சில மீன்பிடிபொருட்கள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டன.

டிங்கி படகு, வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் முல்லைதீவு மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.