எம்முடைய கழுத்து பகுதியில் அமைந்துள்ள தைரொய்ட் சுரப்பியில் வைரஸ் கிருமிகளின் தொற்றால் கட்டிகள் ஏற்படும். அவை சாதாரண கட்டிகளாகவும், வலியற்ற கட்டிகளாகவும் இருக்கும்.  இவ்வகையினதான கட்டிகளில் 20 சதவீதத்திற்கும் கீழான கட்டிகள் தான் புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு தற்போது முற்றிலும் நிவாரண மளிக்கக்கூடிய மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

எச்சில் மற்றும் நீர் அருந்துவதற்கு சிரமப்பட்டாலும் அல்லது கடினமாக தோன்றினாலும் நீங்கள் தைரொய்ட் கட்டி குறித்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். மேலும் கட்டிகளில் வலி உடனடியாக தோன்றாததால் அதன் அறிகுறியை உணர இயலாது. ஆனால் வலி ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். 

 சிலருக்கு அவர்களின் உடலுக்கு தேவையான அயோடின் சத்து குறைவாக இருந்தாலும் தைரொய்ட் சுரப்பியில் கட்டிகள் தோன்றலாம். சிலருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலில் ஏற்படும் மாற்றம் காரணமாகவும் தைரொய்ட்கட்டிகள் தோன்றும். மேலும் சிலருக்கு அவர்களுடைய உடலில் புற்றுநோய் பரவக்கூடிய அல்லது உண்டாக்கக்கூடிய பாரம்பரியம் மரபணுக் கூறுகள் இருக்கலாம். இதன் காரணமாகவும் அவர்களுக்கு தைரொய்ட்புற்றுநோய் பாதிப்பு உண்டாகும். 

இந்நிலையில் தைரொய்ட் சுரப்பியில் சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், அதிவேக வளர்ச்சியைக் கண்டால் அது தைரொய்ட் புற்றுநோய் கட்டியாக இருக்கக்கூடும். இவர்கள் பேசும் குரலில் மாற்றம் ஏற்படும். மூளை, எலும்பு, தோல் உள்ளிட்ட பல இடங்களிலோ அல்லது ஏதேனும் ஒரு இடத்திலோ கட்டிகள் தோன்றி, அந்த கட்டிகள் துடிப்புடன்  இயங்கத் தொடங்கினால் அவையும் தைரொய்ட்புற்றுநோய் கட்டிகளாக இருக்கக்கூடும். 

சிலருக்கு தைரொய்டில் அரை செ. மீ அளவிற்கும் குறைவாகவே கட்டிகள் இருக்கும். ஆனால் இத்தகைய சிறிய கட்டியில் வலியும் உருவாகாது. ஆனால் அதிலிருந்து சிறிது தூரத்தில் நெறிக்கட்டி எனப்படும் நிணநீர் கட்டிகள் உருவாகும். 

அந்த கட்டியின் காரணமாக Papillary Thyroid Cancer எனப்படும் புற்றுநோய் ஏற்படக்கூடும்.இத்தகைய புற்றுநோய் மட்டுமல்ல தைரொய்ட் புற்றுநோய் கண்டறியப்பட்டால் தற்போதைய நவீன மருத்துவம் கண்டறிந்துள்ள மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சை முறைகளின் படி சிகிச்சை எடுத்துக்கொண்டால் தைரொய்ட் புற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொண்டே நாற்பது ஆண்டு காலம் வரை ஆரோக்கியமாக வாழ இயலும்.