பல்கலைக் கழக மாணவன் திடீர் மரணம்

Published By: Daya

23 Aug, 2019 | 02:05 PM
image

தென்கிழக்குப் பல்கலைக் கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் இன்று காலை மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

தன்சில்வத்த,  பூண்டுலோயாவைச் சேர்ந்த 24 வயதான ஜெ.துர்கேஸ்வரன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த மாணவன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் 03ஆம் வருடக் கற்கை நெறியில் கல்வியைத் தொடர்ந்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் பல்கலைக் கழகத்தில் மயக்கமுற்ற நிலையில் சுயநினைவின்றி காணப்பட்டதனை அவரது சக பீட மாணவர்கள் அவதானித்துள்ளனர்.

இதனை அடுத்து பல்கலைக்கழக நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக் குக் கொண்டு சென்றதன் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

 இதேவேளை, இம்மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இது தொடர்பிலான தகவல் எதனையும் ஊடகங்களுக்கு வழங்கப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மறுப் புத் தெரிவித்துள்ளனர். 

 இதேவேளைப் பல்கலைக்கழகத்தினுள் ஊடகவியலாளர்கள் மற்றும் வெளியார் எவரும் உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், நுளை வாயலில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனையும் அவதானிக்க முடிந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26