இந்தியாவிடம் பேச இனி எந்த விடயமும் இல்லையென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவை இரத்து செய்ததை அடுத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக  பிரிந்தது.

பாகிஸ்தான் பிரதமர் காஷ்மீர் பிரச்சிணையை சர்வதேச பிரச்சைினையாக ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் உதவியுடன் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

அத்தோடு சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்த நிலையில், குறித்த இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பை கோரும் முயற்சியுமானது தோல்வியடைந்தது

இதைனைடுத்து பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மாத்திரம் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இந்தியா மீண்டும் தெரிவித்தது.

இந்த நிலையில், இம்ரான் தெரிவிக்கையில்,

பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

அத்தோடு இனிமேல் செய்வதற்கு ஏதுமில்லை. இருப்பினும், இந்தியா தொடர்ந்து குறை கூறி வருகிறது.

இந்தியாவில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவே இந்தியா அவ்வாறு கூறுவதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விடயமும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.