வவுனியாவிலிருந்து வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை இன்று வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியது.

 

வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து சாமி அம்மா தலைமையில் 9ஆவது தடவையாக இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தை நோக்கிய வேல் தாங்கிய நடைபாதை யாத்திரை ஆரம்பமாகியது. 

வவுனியாவிலிருந்து பிரதான ஏ9 வீதியால் செல்லும் குறித்த நடைபாதை யாத்திரை வீதியிலுள்ள ஆலயங்களில் தரித்து நின்று செல்லவுள்ளதுடன் எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்தினத்தன்று  நல்லூர் திருத்தலத்தை சென்றடையவுள்ளது. 

பிரதான வீதியிலுள்ள ஆலயத்தின் நிர்வாக சபையினர் வேல்தாங்கிய பாதையாத்திரையில் கலந்துகொள்ளும் அடியார்கள் தங்களது ஆலயங்களில் தங்கியிருக்கும் தினத்தில் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.