பெரும்பான்மைக் கட்சிகள் எங்கள் மக்களை பகடைக் காய்க்களாக பயன்படுத்தக்கூடாது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
இவ்வளவு காலமும் கிளிநொச்சியில் எத்தனை கிராமங்கள் இருகின்றன கிராமங்களின் பெயர்களைக் கூட தெரியாத பெரும்பான்மைக் கட்சிகளின் பிரதி நிதிகள் எனக் கூறிக் கொண்டு கிராமம் கிராமமாக சென்று குழுக்களை அமைத்து வருகின்றனர் வாழ்வாதாரம் தரப் போகின்றோம் வேலைவாய்ப்பு தரப் போகின்றோம் என்று போலி வார்த்தைகளைக் கூறிக் கொண்டு எம் கிராமங்களில் உலாவருகின்றார்கள்.
தேர்தல்கள் நெருங்க உள்ள நிலையில் மட்டுமே அவர்களுக்கு எங்கள் மக்களின் கஷ்டங்கள் கவலைகள் தெரிகிறது இவ்வளவு காலமும் ஏன் என்று கூட பார்க்காத இவர்கள் எம் மக்களுக்கு யாரென்றே தெரியாத பெரும்பான்மைக் கட்சியினர் எங்கள் தாயக பூமிக்குள் வந்து கூவித் திரிவதைப் பார்க்க ஏழனமாக உள்ளது படித்த இளைஞர் யுவதிகள் வேலை இல்லாது திண்டாட்டத்தில் இருக்க எமது பகுதிகளில் உள்ள திணைக்களங்களில் சிற்ரூளியர்கள் முதல் சாரதிகள் என அனைத்து வேலைகளுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களை நியமனம் வழங்கி அழகு பார்த்தவர்களே இன்று எங்கள் மக்களுக்கு வேலைதருகின்றோம் வாழ்வாதாரம் தருகின்றோம் என்று போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு திரிகின்றனர்.
இவர்களின் நரித் தனங்களை மக்கள் நன்று படித்து விட்டார்கள் உங்கள் ஏமாற்று வேலைகளை உங்கள் ஊர்களில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் அற்ப சலுகைகளுக்காக எங்கள் இனத்தை அடகு வைக்கின்ற மக்கள் எங்கள் பகுதிகளில் இல்லை உங்கள் பகுதிகளில் தேடுங்கள் பலர் கிடப்பார்கள் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM