(இராஜதுரை ஹஷான்)

நான் அமெரிக்கன் அல்ல இலங்கையன் கடந்த  ஏப்ரல் மாதத்துடன் இரட்டை  பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளது  ஆகவே  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான எவ்வித தடைகளும் தனக்கு கிடையாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற  உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான  சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அமெரிக்க குடியுரிமையினை   கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி நீக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த  விடயம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு  திணைக்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  இரட்டை பிரஜாவுரிமைக்காக வழங்கப்பட்டிருந்த கடவுச்சீட்டை இரத்து செய்து  இலங்கையர்களுக்கான புதிய  கடவு சீட்டு   வழங்கப்பட்டுள்ளது.என்றார்.