(நா.தினுஷா)

ஜனநாயக தேசிய முன்னணியை அறிவிப்பதில் காணப்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுக்காணப்பட்டுள்ளது. 

சகலரும் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.  ஆகவே  புதிய கூட்டணியையும் அதன் ஜனாதிபதி வேட்பாளரையும் உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  

பரந்துபட்ட கூட்டணியொன்று இல்லாமல் போட்டியிடும் வேட்பாளரினால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஒருபோதும் வெற்றிக்கொள்ள முடியாது. 

ஆகவே இந்த கூட்டணியை அறிவிக்கும் விடயத்தை தாமதிக்க எவறாவது முயற்சிப்பார்களாக இருந்தால் பெரும் தோல்வியேற்படும். 

அவ்வாறு இன்றில் எதிர்கால்ததில் ஜனநாயக தேசிய முன்னணி சந்திக்கவுள்ள அரசியல் நெருக்கடிக்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொள்ள வரும் என்றும், அவ்வாறு அறிவிக்காவிட்டால் மாற்றுத் தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் தெரிவித்தார். 

ஜாதிக ஹெல உருமய இன்று அதன் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.