சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ,சி,சி,) தலைவரான ஸஸங்க் மனோகர் இன்று இரவு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார், 

இன்று இரவு 11 மணியளவில் இலங்கைக்கு வந்திறங்கவுள்ள ஐ,சி,சி, தலைவர் மனோகர் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார்,

குறிப்பாக ஹோமகவில் புதிதாக அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இலங்கைகக் கிரிக்கெட் நிர்வாகம் குறித்து பேசவும், கிரிக்கெட் போட்டிகளின் தொலைக்காட்சி உரிமங்கள் விற்பனைக் குறித்த விடயத்தில் கையாள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஐ,சி,சி, தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,