2015 டிசம்பர் 20 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு CR&FC மைதானத்தில் இடம்பெறவுள்ள “Enrique Iglesias LIVE in Sri Lanka concert” நிகழ்ச்சிக்கான டிக்கட்களில் பெருமளவானவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவரையில் விற்பனையாகியுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 

இலங்கையில் முதல் தடவையாக இடம்பெறும் இந்த நிகழ்ச்சியானது, Enrique Iglesias இம்முறை மேற்கொள்ளும் உலகளாவிய சுற்றுப் பயணத்தில், ஆசிய பிராந்தியத்தில் பயணம் செய்யும் ஒரே நாடாக இலங்கை அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். 

விசேடமாக, இந்த நிகழ்ச்சிக்கான டிக்கட்கள் விற்பனையாகின்றமை தொடர்பில் liveevents.lk, wow.lk மற்றும் mydeal.lk ஆகியவற்றில் அறிவித்து 24 மணிநேர காலப்பகுதியினுள், மொத்த டிக்கட்களில் 20% விற்பனையாகியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 

இந்த நிகழ்வு தொடர்பில் YouTube இல் Enrique மேற்கொண்டிருந்த அறிவத்தலைத் தொடர்ந்தும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக இணையத்தளங்களில் அதிகளவு ஆர்வம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறுகிய காலப்பகுதியில், இந்த நிகழ்ச்சி தொடர்பில் இணையத்தில் அதிகளவு வரவேற்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

டிக்கட் விற்பனையை ஆகக்குறைந்தது 8500 எனும் அளவுக்கு மட்டுப்படுத்தி, உயர் தரம் வாய்ந்த நிகழ்ச்சி ஒன்று இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக Enrique Iglesias LIVE in Sri Lanka concert நிகழ்ச்சியை குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் Live Events ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பிரைம் ரெசிடென்சிஸ், E FM மற்றும் Revd ஆகியன அனுசரணை வழங்க முன்வந்துள்ளன. 

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கட்கள் விரைவில் விற்றுத் தீர்ந்துவரும் நிலையில், இலங்கையில் இடம்பெறும் இந்த மாபெரும் நிகழ்வின் மூலமாக உள்நாட்டில் களிப்பூட்டும் நிகழ்ச்சி ஒன்றாக முதன் முதலில் A தர பொப் பாடகர் ஒருவரை அரங்கேற்றுவதன் மூலமாக, இலங்கையிலும் இது போன்ற நிகழ்ச்சிகளை அரங்கேற்ற முடியுமா எனும் பலரின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக Enrique போன்ற புகழ்பெற்ற பாடகர்களுக்கு பல மில்லியன் கணக்கான ரசிகர்களை கவரக்கூடிய வசதி வாய்ப்பு காணப்படுகிறது. 

இலங்கையின் புகழ்பெற்ற ஆங்கில வானொலி அறிவிப்பாளரும் Live Events இன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷக் (Shaq)கருத்து தெரிவிக்கையில், 

“நம் நாட்டவர்களுக்கு Enrique இன் கச்சேரி ஒன்றை பார்வையிட வாய்ப்புக் கிடைத்துள்ளமையின் மூலமாக அவர்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளதுடன், இந்த சர்வதேச நிகழ்ச்சியின் மூலமாக, எமது நாட்டின் புகழை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், உலகப் புகழ் பெற்ற ஏனைய இசைக் கலைஞர்களை கவரக்கூடியதாகவும் அமைந்துள்ளது. Live Events ஐச் சேர்ந்த நாம் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய அதிகளவு ஆர்வமாகவுள்ளோம்” என்றார்.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கும் பிரைம் லான்ட்ஸ் குழுமத்தின் தலைவர் பி.பிரேமலால் கருத்து தெரிவிக்கையில், 

“முன்னணி பிரைம் லான்ட்ஸ் குழுமம், இலங்கையில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாளராக திகழ்கிறது. தனது துணை நிறுவனமான பிரைம் ரெசிடென்ஸிஸ் பங்களிப்புடன், பொப் பாடகரான Enrique Iglesias இன் அனுபவத்தை இலங்கையர்களுக்கு பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. 

சொகுசான வாழ்க்கை முறையின் மாற்றத்தை வழங்கி வரும் பிரைம் ரெசிடென்ஸிஸ் மூலமாக சொகுசான பிரதான செயற்திட்டங்கள், மாறுபடும் மக்களின் வாழ்க்கைக்கு வழங்கப்படுகின்றன. 

மக்களை ஒன்றிணைக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஒரு முறையாக இசை அமைந்துள்ளது என நாம் கருதுவதுடன், எமது இலங்கையர்கள், சிறந்த இசை அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். 

அதன் காரணமாக, இந்த மாபெரும் இசை நிகழ்வை நாம் ஏற்பாடு செய்து வழங்குகிறோம். எமது வாடிக்கையாளர்களுக்கும், இலங்கையர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த பாடகர்களின் இசை நிகழ்வுகளை அனுபவித்து மகிழக்கூடிய வாய்ப்பை வழங்க நாம் முன்வந்துள்ளோம். பிரைம் ரெசிடென்ஸிஸ் என்பது இலங்கையை உலகளாவிய ரீதிக்கு உயர்த்த தன்னை அர்ப்பணித்துள்ளது” என்றார்.

முக்கியமாக, எடிசலாட் மற்றும் கொன்டினென்டல் இன்சூரன்ஸ் ஆகியன இந்த Enrique Iglesias LIVE in Sri Lanka concert நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எடிசலாட் லங்காவின் பிரதம வணிக அதிகாரி யசீர் அபுல்மெயெம் கருத்து தெரிவிக்கையில், 

“இந்நிகழ்ச்சிக்கு நாம் பிரதான அனுசரணை வழங்குவதையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். இதுபோன்றதொரு புகழ்பெற்ற நிகழ்ச்சியின் பிரதான கையடக்க தொலைபேசி சேவை வழங்குநர் என்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

‘Enrique Iglesias Live in Sri Lanka’என்பது எமது பிரதான வாடிக்கையாளர் கட்டமைப்பை சென்றடைவதற்கு பொருத்தமான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுடன் பங்காண்மைகளை ஏற்படுத்துவதன் மூலமாக, எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுக்க முடியும்” என்றார்.