சர்வதேச வாணவேடிக்கை திருவிழாவில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச வாணவேடிக்கை திருவிழா நடைபெற்றது. 10 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்படும் இந்த திருவிழாவைக்காண, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

பல்வேறு நிறங்களில் மின்னும் பூக்கள், மழையாகப் பொழிவது போல் தோற்றமளிக்கும் இந்த வாணவேடிக்கை நிகழ்ச்சி, காண்போரின் கண்களுக்கு இசையுடன் கூடிய விருந்தளித்தன. ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து 8 அணிகள் பங்கேற்ற இந்த விழாவில், ரஷ்யா முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது.