அம்பகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுகல, மவ்ஹார பிரதேசத்தில்  சூரியவெவ அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சுற்றிவளைப்பில் கைது செயப்பட்டோர் அலுத்வெல வீதி ஹம்பகமுவ பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

35 முதல் 56 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்கள், மிருக வேட்டைக்காக இந்த துப்பாக்கிகளை வைத்திருந்திருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், சூரியவெவ பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.