புதுடில்லியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

“தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தாமதத்திற்கு தி.மு.க. காரணம் அல்ல. டில்லியில் தி.மு.க. முன்னிலையில் பல்வேறு கட்சிகளின் ஒத்துழைப்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் முக்கிய நோக்கம் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, வீட்டுககாவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள்  விடுவிக்கப்பட வேண்டும் என்பதே. மேலும் காஷ்மீரில் சுமுக நிலை கொண்டுவரப்பட வேண்டும்.

 முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப சிதம்பரத்தின் கைது கண்டிக்கத்தக்கது. இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அவர் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்தது நாட்டிற்கே அவமானம். இந்த கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.” என்றார்.