இலங்கையில் வானொலி தொகுப்பாளினியாகவும், சின்னத் திரை தொகுப்பாளினியாகவும் , மொடலிங் மங்கையாகவும் திகழும் நடிகை ஷாஷ்வி பாலா முதன்முதலாக  அறிமுக இயக்குநர் கவிராஜ் இயக்கத்தில் தயாரான எல்லாம் மேல இருககுறவன் பாத்துப்பான் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்ற படத்தை ராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் மறைந்த பிரபல தயாரிப்பாளரான இப்ராஹிம் ராவுத்தரின் மகன் அபூபக்கர் தயாரித்திருக்கிறார். இதில் ஆரி, ஷாஸ்விவி பாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கார்த்திக் ஆச்சார்யா இசையமைத் திருக்கிறார். கௌதம் ரவிச்சந்திரன் படத்தை தொகுக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கவிராஜ்.

இந்த படத்தின் ஒடியோ வெளியீடு சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்குபற்றிய மூத்த திரைப்பட இயக்குனரும், திரைக்கதை சிற்பியுமான கே.பாக்யராஜ் ஒடியோவை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பங்குபற்றி நடிகை ஷாஷ்வி பாலா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ நான் இலங்கை பெண். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு எம்முடைய பயணத்தை தமிழ் சினிமாவிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். அதற்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப் பாளருக்கும் நன்றி. கதாநாயகன் ஆரி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார்.ஏலியன்களை வைத்து தன்னுடைய முதல் படத்தை இயக்கும் இயக்குனர் கவிராஜ், எம்மை இந்த படத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். புதுவிதமான கொன்செப்ட் என்றாலும், கொமர்ஷல் அம்சங்களுடன் இதனை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் மூலம் பெரியதொரு எதிர்காலத்தை நான் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என்றார்.