சஹ்ரானுடன் நுவரெலியாவில் பயிற்சி பெற்ற  முக்கிய செயற்பாட்டாளர்  ´அபு இக்ரிமா´ எனப்படும் மொஹமட் ரவைதீன் மொஹமட் அலி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாஷிமிடம் நுவரெலியா முகாமில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டு அம்பாறை பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்  இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மொஹமட் ரபாய்டின் மொஹமட் அலி எனப்படும் அபு இக்ரிமா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.