திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்து பொதி கஞ்சா தூள் வைத்திருந்த ஒருவரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(22) உத்தரவிட்டார்.

ஆலீம் நகர்,மூதூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே  இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கேரள கஞ்சா விற்பனை செய்து வருவதாக மூதூர் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சோதனை மேற்கொண்ட போதே பானையொன்றினுள் மறைத்து வைத்திருந்த நிலையில் பத்து  கஞ்சா தூள்  பொதிகளை  கைப்பற்றியதாகவும் சந்தேக நபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து சந்தேக நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.