யுத்தத்தின் போது பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மக்களை படையினர்  மீட்டெடுத்தமை அவர்களது மனிதநேயத்திற்கு சான்று என இலங்கையின் புதிய இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். 

நாட்டை அது எதிர்கொள்ளும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களில் இருந்தும் பாதுகாக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்நாட்டின் இறைமை பிரதேச  ஒருமைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகியவற்றினை பாதுகாப்பதில் இராணுவத்திற்கு இராணுவதளபதி என்ற அடிப்படையி;ல் உரிய தலைமைத்துவத்தை வழங்குவேன் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அனைத்து அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமும் இந்த நாட்டின் அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதி;ப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் இராணுவங்கள் நாட்டின் மக்களின் பிரித்துபார்க்கமுடியாத உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஜனநாயக வழிமுறையிலான வாழ்க்கை சூழலை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளன என சவேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை உள்நாட்டு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான  தயார் நிலையில் இராணுவங்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால மனிதாபிமான நடவடிக்கையின் போது எந்த நாடும் ஏற்றுக்கொள்ளகூடிய இந்த வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றினோம் சர்வதேச மனிதாபிமான மற்றும் உரிமைகளை பின்பற்றியே நாங்கள் நடந்துகொண்டோம் எனவும் இலங்கையின் புதிய இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மக்களை படையினர்  மீட்டெடு;த்தமை அவர்களது மனிதநேயத்திற்கு சான்று என இலங்கையின் புதிய இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்