(எம்.எம்.மின்ஹாஜ்)

தங்களுடைய மோசடிகளை மூடி மறைப்பதற்காக போலியான நாடகங்களை எதிரணியினர் அரங்கேற்றுகின்றனர். எவ்வாறாயினும் குற்றம் செய்தவர்கள் நிச்சியமாக தண்டிக்கப்படுவார்கள். வசீம் தாஜூதீன் வழக்கின் குற்றவாளி  கைதாகுவதற்கு வெகுதூரம் இல்லை.  அந்த குற்றவாளி எண்ணி சில நாட்களுக்குள் கைது செய்யப்படுவார் என்று கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாதுகாப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்ட காரை பெற்றுக்கொள்வதா என்பதனை பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்துள்ளார்.  ஆகவே பிரதமரின் பாதுகாப்பிற்கு பாராளுமன்றமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.