தலைநகர் கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் புறக்கோட்டையிலிருந்து  கொம்பனிதெரு  வரையான படகு சேவை இன்று பேர வாவியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாகல ரத்னாயக்க,ஜோன் அமரதுங்க பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கடந்த ஜுலை மாதம் படகு சேவைக்கான முதலாவது கண்காணிப்பு சுற்றுப்பயணம் நகர்ப்புற மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவினால்  மேற்கொள்ளப்பட்டது.

இந்த படகு சேவையை ஆரம்பிப்பதன் மூலம், புறக்கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸிற்கு 10 நிமிடங்களில் பயணிக்க முடியுமென்பதோடு,போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இதுவொரு ஒரு சிறந்த தீர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

படகு சேவை ஆரம்பிக்கப்பட்ட முதல் மாதத்தில் இலவச சவாரிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

படங்கள்: ஜே.சுஜீவகுமார்