இலங்கை  நியூசிலாந்து அணிகளுக்கான 2 ஆவது டெஸ்ட் போட்டி  ஆரம்பமாவது சீரற்ற காலநிலையால் தாமதமாகியுள்ளது.

கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாக இருந்த நிலையிலேயே சீரற்ற காலநிலை காரணமாக போட்டிகள்  தடைப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கான முதாலவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது.இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி  முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்கள் பெற்றது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சிலும் சகல விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்கள் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில்  சகல விக்கெட்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றதோடு , இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.