பிரித்­தா­னிய பிர்­மிங்ஹாம் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த 88 பாட­சாலைச் சிறு­வர்கள்  பியானோ இசைக்­க­ரு­வி­யொன்றை  ஒரே சம­யத்தில் இசைத்து புதிய உலக சாதனை படைத்­துள்­ளனர்.

பிர்­மிங்­ஹா­மி­லுள்ள சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்­தில் கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பொறி­யி­யலா­ளர்­களால் வடி­வ­மைக்­கப்­பட்ட விசேட பியானோ இசைக்­க­ரு­வியை  6 வய­துக்கும் 14 வய­துக்­கு­மி­டைப்­பட்ட வய­து­டைய  சிறு­வர்கள் ஒன்­றி­ணைந்து இசைத்து இந்த சாத­னையை நிறை­வேற்­றி­யுள்­ளனர். அவர்கள் இதற்கு முன்னர் 67 பேரால் ஒரே­ச­ம­யத்தில் பியானோ இசைக்­க­ரு­வியை இசைத்து மேற்­கொள்­ளப்­பட்ட சாத­னையை முறி­ய­டித்­துள்­ளனர்.

பிர­பல ஓவியக் கலைஞர் லிய­னார்டோ டாவின்­சியின் 500ஆவது ஞாப­கார்த்த தின வைபவத்தின் அங்கமாகவே இந்த இசைக்கருவியை இசைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.