(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

முல்­லைத்­தீவு நாயாறு நீரா­வி­யடி பிள்­ளையார் கோவில் விவ­கா­ரத்தில் தமது ஆதிக்­கத்தைச் செலுத்­த­மு­டி­யா­ததால் இரா­ணு­வத்­தினர் பழி­வாங்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர். இது­தொ­டர்­பாக  அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் தெரி­வித்தார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தும் அதி­கார சபைச் சட்­டத்தின் கீழ் மருந்­து­களின் விலை­க்கு­றைப்பு தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

முல்லைத்­தீவு நாயாறு பிர­தே­சத்தில் நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யத்தின் நிர்­வாக உறுப்­பினர் ஒரு­வரை இரா­ணு­வத்­தினர் நேற்­றுப்­பிற்­பகல் கைது­செய்­துள்­ளனர்.  அவர் இருக்கும் இடத்­தி­லி­ருந்து 500 மீற்றர் தூரத்தில் உள்ள புல் பற்றையை எரி­யூட்­டி­ய­தாகக் கூறியே இவர் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். இரா­ணு­வத்­தி­னரால் கைது­செய்­யப்­பட்ட இவர் வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்­தி­னரின் ஊடாக பொலிஸில் ஒப்­ப­டைக்­கப்­பட்டு பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.  முல்­லைத்­தீவு நீரா­வி­யடி பிள்­ளையார் கோவில் விவ­கா­ரத்தில் தமது ஆதிக்­கத்தைச் செலுத்­த­மு­டி­யாது விரக்தி நிலையில் இருக்கும் இரா­ணு­வத்­தினர் தற்­போது பழி­வாங்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இதன் ஒரு அங்­க­மாக நீரா­வி­யடி பிள்­ளையார் கோவிலின் நிர்­வாக உறுப்­பினர் ஒருவர் பொய் கார­ணத்­துக்­காக இரா­ணு­வத்­தி­னரால் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். இது­தொ­டர்­பாக அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 

இதே­வேளை,2019ஆம் சித்­திரை பௌர்­ணமி தினத்­தன்று கள்ள மாடு ஏற்றிச் சென்ற கார­ணத்­தினால் உழவு இயந்­திரம் ஒன்று கைப்­பற்­றப்­பட்டு பொலி­ஸா­ரினால் தடுத்­து­வைக்­கப்­பட்­டது. இதற்­கான வாகன பதிவுச் சான்றிதழை பார்த்­த­போது, குறித்த உழவு இயந்­திரம் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சுக்கு உரி­ய­தாகக் காணப்­பட்­டது. 2009 ஆம் ஆண்டு மெனிக்பார்ம் முகா­மி­லி­ருந்த மக்­க­ளுக்­காக இந்த உழவு இயந்­திரம் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த உழவு இயந்­தி­ரமே தற்­பொ­ழுது கள்­ள­மாடு ஏற்றிச் செல்­லும்­போது பொலி­ஸா­ரினால் கைப்­பற்­றப்­பட்­டது. 

மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ராக ரிஷாத் பதி­யு­தீனே காணப்­பட்டார். இவ்­வா­றான நிலையில் குறித்த உழவு இயந்­திரம் கடந்த பத்து வரு­டங்­க­ளாக தனி­யாரின் தென்னந் தோட்­ட­மொன்­றி­லேயே பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் இந்த உழவு இயந்­திரம் தம்மால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது எனக் கூறி மன்னார் பிர­தே­ச­பையின் தவி­சாளர் செய­லா­ள­ருக்கு கடி­த­மொன்றை வழங்கி நீதி­மன்­றத்­தி­லி­ருந்து அதனை மீட்­டுள்ளார். எனினும், பிர­தே­ச­ச­பை­யினால் இந்த உழவு இயந்­திரம் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதனை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் தீர்­மானம் எடுத்­துள்­ளனர்.

அர­சாங்­கத்­துக்குச் சொந்­த­மான வாக­ன­மொன்று கடந்த பத்து வரு­டங்­க­ளாக தனி­யாரின் தோட்­ட­மொன்றில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த ஒரு உழ­வு ­இ­யந்­திரம் மாத்­தி­ர­மல்ல, இதுபோன்று 30ற்கும் அதிகமான உழவு இயந்திரங்கள் இவ்வாறு உள்ளன. இது குறித்து அரசாங்கம் என்ன நடவடிக் கை எடுக்கும்? இதுபற்றி எப்.சீ.ஐ.டியிடம் முறை யிடமுடியும். எனினும், அதன்மீது நம்பிக்கையில்லை யென்பதால் முறையிட விரும்பவில்லை. அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்தினால் எப்.சீ.ஐ.டியில் முறை யிட தயாராக இருக்கின்றேன் என்றார்.