ஏமனில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானம்..!

Published By: Daya

22 Aug, 2019 | 10:00 AM
image

அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான பன்முக பயன்பாடு கொண்ட ‘எம்.கியூ.9’ ரக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமனில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர் களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

 

இந்நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சவூதி அரேபியா தலைமையிலான இந்த கூட்டுப்படைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான பன்முக பயன்பாடு கொண்ட ‘எம்.கியூ.9’ ரக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமனின் மத்திய பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள தமர் மாகாணத்தின் வான்பரப்பில் அமெரிக்க ஆளில்லா விமானம் நுழைந்தபோது, ஏவுகணை மூலம் அதனை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சவூதி கூட்டுப்படைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏமனின் வான்வெளியில் படையெடுப்பதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும், ஏனெனில் ஏமன் வானத்தில் அந்நிய விமானங்கள் தோன்றுவதை தடுக்க கிளர்ச்சியாளர்களுக்கு அதிகாரம் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47