பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.

பாராளுமன்ற சபைத்  தலைவர் லக்ஷ்மன் கிரியல்லவிற்கு பிரதமர் இந்த உத்தரவினை  பிரதமர்  பிறப்பித்துள்ளார். குறித்த  குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது  சர்ச்சை நிலைமை ஏற்பட்டது.

குறைநிரப்புப் பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சியினரின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கான காரணம் தொடர்பில் பிரதமர் இந்த அறிக்கையை கோரியுள்ளார்.

ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகத்தின் பணிகள், குறைநிரப்புப் பிரேரணைக்கு ஆளும் கட்சியில் ஆதரவளிக்க உறுதியளித்த தரப்பினர், வாக்கெடுப்பின் போது இடம்பெற்ற விடயங்கள் போன்றன குறித்து விளக்கம் அளிக்குமாறு அவைத் தலைவரிடம் பிரதமர் கோரியுள்ளார்.