வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருந்த குற்றச்சாட்டின் பேரில்  குறித்த சந்தேக நபர்களுக்கு உதவி வழங்கிய மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் அம்பலாங்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூலிகொட பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வெலிக்கடை சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்திருந்தனர்.

இந்நிலையில் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்தோடு சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.