(ஆர்.விதுஷா)
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகளுக்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்ட வேண்டும் என வலியுறுத்த கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையமாறு “அக்கரையில் நாம் “ என்னும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியினரால் (ஜே.வி.பி) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகசந்திப்பு இன்று புதன்கிழமை சமய சமூக நடுநிலையத்தில் இடம் பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி கூறியதாவது ,
தேசிய வருவாயில் பாரியளவிலான பங்களிப்பை வழங்குபவர்களாக வெளிநாட்டில் தொழில் புரிவோர் விளங்குகின்றனர். அவர்களினால் 5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகளவிலான வெளிநாட்டு வருவாய்கிடைக்கப்பெறுகின்றது. இந்நிலையில் அவர்களுடைய உரிமையை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.
வெளிநாட்டில் தொழில் புரியும் நாட்டின் பிரஜைகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்கான உரிமையை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியது அவசியமானதாகும். வெளிநாடுகளில் தொழில் புரியும் தமது நாட்டவர்களுக்கு தேர்தலின் போது வாக்களிப்பதற்கான வாய்ப்பை 115 நாடுகள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளன.
எமது நாட்டிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 2016 இல் மேற்கொள்ளப்பட்டன.
எனவே வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கும் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படகின்றன. ஆகவே , இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM