இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நான்கு மில்லியன் மக்கள் Multible Myeloma என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது அண்மைய ஆய்வு. அதே தருணத்தில் இதற்கு தற்போது ஸ்டெம்செல் தெரபி, டார்க்கெடட் தெரபி போன்ற நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்தலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கிறது. 

Multible Myeloma என்பது இரத்த புற்றுநோய் அல்ல. இரத்தம் சார்ந்த புற்றுநோய். இரத்தத்தில் 70 சதவீதம் நீர் இருக்கும். மீதமுள்ள 30 சதவீதத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், புரதம் போன்றவை இருக்கும். இரத்தம்  bone marrow எனப்படும் எலும்பு மஜ்ஜையிலிருந்து உற்பத்தியாகிறது. இந்த எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களால்தான் இரத்த புற்றுநோய் உண்டாகிறது. 

இந்நிலையில் எலும்பு மற்றும் வெள்ளையணுக்களில் ஏற்படும் ஒரு வகையினதான மாற்றங்களால் உருவாவதுதான் multiple myeloma எனப்படும் இரத்தம் சாராத புற்றுநோய். நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் இரத்த தொகுதிகளில்  ஏற்படும் மாற்றங்களால்  Multible Myeloma எனப்படும் புற்று நோய் ஏற்படுகிறது. சிலருக்கு இந்த தருணத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான புரத சத்துக்கள் மட்டும், இயல்பான அளவை காட்டிலும் மிக அதிக அளவில் உற்பத்தியாகும் அல்லது இரத்தத்தில் தேங்கத் தொடங்கும்.

30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இருக்கும் நாட்பட்ட காய்ச்சல், முதுகு வலி,உடல் எடை குறைவு, சோர்வு, மலச்சிக்கல் போன்றவை இதன் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். 

இதற்கான பரிசோதனைகளுக்கு பிறகு கீமோதெரபி, டார்கெட் தெரபி மற்றும் ஸ்டெம்செல் தெரபி மூலம் முழுமையாக இதனை குணப்படுத்தலாம். இவ்வகையினதான சிகிச்சைக்கு பிறகு இவர் தங்களது வாழ்க்கை முறையில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல விடயங்களை உறுதியாக கடைபிடித்தால் மீண்டும் இத்தகைய புற்றுநோயின் தாக்கம் இல்லாமல் முப்பதாண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழலாம். 

டொக்டர் கிருஷ்ணன்.

தொகுப்பு அனுஷா.