இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை நேற்றையதினம் சந்தித்து இந்திய ஆக்கிரமிப்பு காஸ்மீரின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளித்தார்.

இச்சந்திப்பின் போது  ஜம்மு மற்றும் காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கம் மற்றும் உறுப்புரை 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்வனூடாக மக்கள் தொகை அமைப்பினை மாற்றியமைக்க மேற்கொண்ட சட்டவிரோத, ஒருதலைப்பட்டசமான நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

மேலும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் காஸ்மீரில் மோசடைந்துவரும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் ஜனாதிபதிக்கு அவர் விளக்கமளித்தார்.

இந்நடவடிக்கைகள் காஸ்மீர் மீதான ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தினை மீறுவதாக அமைந்துள்ள என உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

அத்துடன் சார்க் அமைப்பினை மீள் செயற்படுத்துவதற்கான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கை மத்தியஸ்தம் மற்றும் ஆதரவினை வழங்குவதாக ஜனாதிபதி இதன்பொழுது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.