(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். 

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை நஷ்டத்தில் இயங்குகின்றது. நிதி அமைச்சின் ஊடாக அரசாங்கமே இதனை தாங்கி வருகின்றது. தனியார் துறைக்கு கொடுக்க முடிந்தால் பிரச்சினை இல்லை.

 அரசாங்கம் பராமரிக்க வேண்டும் என்றால் நஷ்டத்தை தக்கிந்தான் ஆகவேண்டும். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் சேவை கடந்த 2018 ஆம் ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் சிறிது காலம் விமானநிலையம் மூடப்பட்டமை மற்றும் விமானங்கள் விற்றமை என்பன காரணமாக அமைந்தது. அத்துடன் எரிபொருள் விலை உயர்வும் பிரதான காரணியாக அமைந்தது. இன்றுவரை திறைசேரியின் உதவியுடன் தான் கொண்டு செல்கின்றோம் என்றார்.