இராணுவத்தினரும் பொலிஸாரும் இன்று கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டை சோதனை யிட்டுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளிற்காக கொழும்பில் நான் இருக்கின்ற வேளையில் மறைத்து வைக்கப் பட்டிருக்கின்ற ஆயுதங்களை தேடுகின்றோம் என தெரிவித்து  படையினரும் பொலிஸாரும் எனது வீட்டில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பிழையான தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது  இதனால் எனது உயிருக்கு ஆபத்து என சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் சபாநாயகர் தலையிட்டு  தனது சிறப்புரிமைகளை பாதுகாக்கவேண்டும் என சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.