பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஆணுறைகளின் அளவுகைள சீர்செய்ய ஆண் உறுப்பை அளப்பதற்காக புதிய அளவு நாடா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டின் ஸ்டொக்ஹொம் சுகாதார மருத்துமனையே இந்த அளவு நாடாவை அறிமுக்கப்படுத்தியுள்ளது.
இளைஞர்களின் பால்வினை நோய்களை தடுக்கும் வகையில் இந்த நாடா அறிமுகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஸ்டொக்ஹொம் சுகாதார மருத்துமனை தெரிவித்துள்ளது. 

ஆண் குறியின் நீளம் மற்றும் சுற்றளவை அளப்பதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட இந்த அளவு நாடா இலவசமாக விநியோகிக்கப்படுகின்றது.

குறிப்பாக 23 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் குறித்த அளவு நாடாவினை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  ஆண்கள் அளவில்லாத ஆணுறைகளை  உபயோகிப்பதால் உடலுறவின்போது வழுக்குவதும் தடையேற்படுவதும் பிரதான காரணமாக இருந்தாலும் பல பாலியல் நோய்களுக்கு உள்ளாகுவதாகவும்  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.