(செ.தேன்மொழி)

ஹங்வெல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டப்பட்டுள்ளது.

 

ஹங்வெல்ல - ரணால பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் தனியார் வர்த்தக நிலையமொன்றில் இனந்தெரியாத இருவரே இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் இருவரும் துப்பாக்கியை காண்பித்து குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை அச்சுறுத்தி அணிந்திருந்த நகைகளையும் , அவரது மனைவியும் அணிந்திருந்த தங்க நகைகளையும் , வர்த்தக நிலையத்தில் இருந்த பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதன்போது 91 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும், ஐயாயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது சந்தேக நபர்களிடம் இருந்த துப்பாக்கி இயங்கியுள்ளதுடன் , இதனால் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்க வில்லை. ஹங்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.