மாத்தளை மாவட்டம், செங்கலகடைத் தோட்டம் சுற்றுலாத்துறைக்கு மையமாக விளங்கும் இந்த பிரதேசம் தற்போது தோட்ட அதிகாரியால் கையகப்படுத்தும் சூழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் இந்த கையகப் படுத்தும் முயற்சியால் சுமார் 100 குடும்பத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்படப் போவதாகவும் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலாதுறையினர் விரும்பத்தக்க இடமான செங்கலகட நீர் ஊற்று தற்போது தோட்ட அதிகாரியால் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகவும் இதனால் நாளந்த சிறுகடை நடத்துனர் சுற்றுலாத்துறை சவாரி ஆட்டோ ஓட்டுனர்கள் தரிப்பிடம் கையகப்படுத்துவதால் தொடர்ந்து தாம்பாதிக்கப்படுவதால் இளைஞர்களும் போராட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள் இந்த போராட்டத்தில் செம்புவத்த, ரோட்டலா,குளிராட்டி, நடுத்தோட்டம், எல்கடுவ தோட்ட மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 15 ஆண்டுகாலமாக செங்கலகடை தோட்டத்தில் முகாமையாளராக இருந்துவரும் குறித்த நபர், தொடர்ந்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும், இனவாதம் கக்கும் செயற்பட்டால் மக்கள் மனதளவிலும் பாதிக்கப்படுவதாகவும் குறித்த அதிகாரி தமக்குத் தேவையில்லையெனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோசம் எழுப்பியதுடன், குறித்த பிரதேசத்தில் இருக்கும் சுத்தமான குடிநீர் ஊற்றினை போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிராகவும் குடிநீரை வியாபாரமாக்குவதற்கு எதிராகவும் போராட்டத்திலீடுபட்டவர்கள் கோசம் எழுப்பினர்.