கட்டார் எப்போதும் புதுமையான தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்து வரும்  நாடாகும்.

அந்தவகையில் வீதிகளில் கடுமையான வெப்பநிலையை குறைக்க கட்டார் அரசாங்கம் புதிய முறையொன்றை கையாண்டுள்ளது.

கட்டார் தலைநகரான டோகாவில் வெப்பநிலையை குறைக்க வீதிகளில் நீல நிறப் பூச்சு பூசப்பட்டு வருகின்றன.

வீதிகள் கடுமையான நிறத்தில் இருக்கும் போது சூரிய வெப்பத்தை குவிப்பதால் கடுமையான நிறம் வெப்பத்தை உறிஞ்சுவதன் மூலம் அதிக வெப்பநிலை தோற்றுவிக்கின்றது.

இளம் நிறங்கள் வீதிகளில் இருந்து சூரிய ஒளியை பிரதிபலிப்பதன் மூலம் வீதிகளின் மேற்பரப்பின் வெப்பநிலையை குறைக்கிறது.

அத்துடன் நீல நிறப் பூச்சு  வாகனங்களின் டயர்களை பாதிக்காமல் நீண்டகாலம் அவற்றின் பயன்பாடு இருக்கும்.  கூடுதலாக, நீல நிறப்பூச்சு வீதிக்கு ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான வடிவத்தை வழங்குகின்றதாக பொறியிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.