தவறான இரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருவதாக பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

முன்னணி கதாநாயகிகளாக இருந்த மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரே ஆகியோரை புற்றுநோய் தாக்கியது. நடிகைகள் சிலர் உடல் நலம், மன நல பாதிப்புகளிலிருந்து மீண்டுள்ளனர். முன்னணி கதாநாயகிகளாக இருந்த மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரே ஆகியோரை புற்றுநோய் தாக்கியது. இதற்காக அவர்கள் சிகிச்சை எடுத்து குணமானார்கள். தீபிகா படுகோனே, ஆண்ட்ரியாவும் மன அழுத்தத்தில் இருந்து மீண்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது அமிதாப்பச்சன்  இவ்வாறு தெரிவித்துள்ளார். 

“நான் காசநோய் பாதிப்பிலிருந்து தப்பி இருக்கிறேன். ஹெபடைடிஸ் பி பிரச்சினையில் இருந்தும் மீண்டேன். எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லி உடல் பரிசோதனை செய்துகொள்வது சம்பந்தமான விழிப்புணர்வுகளை பரப்பி வருகிறேன். எனது உடலில் தவறான இரத்தம் செலுத்தப்பட்டதால் கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டது.

மீதி 20 சதவீத கல்லீரலோடுதான் நான் வாழ்ந்து வருகிறேன். எல்லா நோய்களுக்குமே சிகிச்சை இருக்கிறது. எனக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது கூட 8 வருடங்கள் வரை தெரியாது. எனக்கு வந்த இந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் வரலாம் என்று கூறி வருகிறேன். உடல் பரிசோதனைகள் செய்து கொள்ளவில்லை என்றால் இதுபோன்ற நோய் பாதிப்புகள் உங்களுக்கு எப்போதுமே தெரியாமல் போய்விடும். அதற்கான சிகிச்சையையும் பெற முடியாது.” இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.