இராஜதந்திர எல்லைகளை மீறி இலங்கைக்குள் தலையிடும் அமெரிக்கா - விமல்

Published By: J.G.Stephan

21 Aug, 2019 | 12:58 PM
image

(எம்.மனோசித்ரா)

இராஜதந்திர பணிகளின் எல்லைகளை மீறி அமெரிக்கா இலங்கையின் உள்ளக விவகாரங் களில் தலையிடுகின்றது என்று தேசிய சுதந்திர முன்ன ணியின் தலைவர் விமல் வீர வன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். 

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை கண் டித்துள்ள  அமெரிக் காவின் நிலைப்பாட்டை கண்டிக்கும் வகையில்  விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக் கப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

இராணுவத்தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார். இந்த நியமனமானது இலங்கையின் உள்ளக விவகாரமாகும். இந்நிலையில் குறித்த நியமனம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ்ட் தெரிவித்துள்ள கருத்தானது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். 

சவேந்திர சில்வா  இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதன் ஊடாக சர்வதேசத்தில் இலங்கை அகௌரவம் அடைந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். 

அமெரிக்க தூதுவர் தனது இராஜதந்திர பணியின் எல்லைகளை மீறி இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அநாகரிகமான முறையில் தலையிட்டுள்ளார். அமெரிக்க அடிமை இராச்சியம் ஒன்றுக்கு கட்டளைகளை பிரயோகிக்கும் வகையில் இலங்கைளின் இராணுவ தளபதி நியமனத்தில்அவர் தெரிவித்த கருத்தானது ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்ல. 

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க எமது அரசாங்கத்துக்கோ இலங்கையின் நட்பு நாடுகளுக்கோ அமெரிக்க சந்தர்ப்பம் வழங்கியிருக்கவில்லை. மாறாக அநாவசியமான அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலேயே அமெரிக்க செயற்பட்டிருந்தது. 

மேலும் இவ்வாறான சம்பவங்களின் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு அநீதியே ஏற்பட்டது. அத்துடன் இயற்கை நீதிகளுக்கு அப்பாற் சென்று அமெரிக்க இலங்கை விவகாரங்களில் செயற்படுகின்றது. இந்நிலையில் இராணுவ நியமனம் தொடர்பில் பேச அமெரிக்காவுக்கு எவ்விதமான தார்மீக உரிமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04