டக்ளஸ், வரதர் தரப்­புகள் கோத்­தா­வுடன் இணைந்து தமி­ழர்­களை மேலும் நசுக்க  கங்­கணம் கட்­டு­கின்­றன  ; முல்­லைத்­தீவு காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்­த­லைவி 

Published By: R. Kalaichelvan

21 Aug, 2019 | 12:34 PM
image

கடந்த காலங்­களில் அர­சுடன் இணைந்து எமது பிள்­ளை­களை கடத்­திய டக்ளஸ் மற்றும் வர­த­ராஜப் பெருமாள் தரப்­புகள் மீண்டும் கோத்­தா­வுடன் இணைந்து தமி­ழர்­களை மேலும் நசுக்க கங்­கணம் கட்டிக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்று முல்­லைத்­தீவு மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்டோர் சங்­கத்­த­லைவி மரி­ய­சுரேஷ் ஈஸ்­வரி தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம் ஊடக மையத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­விய­லா ளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

உள்­நாட்டு போரில் போர்க்­குற்­றத்தில் ஈடு­பட்­ட­வர்­களில் முக்­கி­ய­மா­னவர் பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லாளர்  கோத்தாபய ராஜ­பக்ஷவே என்று எமது மக்­க­ளுக்கும் உல­குக்கும் தெரியும். எங்­களின் உற­வு­களை மறைத்து வைத்­தி­ருக்க பிர­தான சூத்­தி­ர­தாரி இவர்தான். 

தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் கோத்­த­பாய போர்க்­குற்­ற­வாளி தான். அந்த மன­நி­லையில் எவ்­வித மாற்­றமும் இல்லை.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தாவை இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வர தமிழ் மக்­க­ளா­கிய நாம் இட­ம­ளிக்க மாட்டோம். அவர் எம்மை மீறி ஜனா­தி­ப­தி­யாக வந்­தாலும் மிகு­தி­யாக இருக்­கின்ற எங்­களை கொன்­ற­ழிக்­கவே துடிப்பார். 

காணா­மல்­போன உற­வு­க­ளுடன் முக்­கி­ய­மாக அர­சியல் கைதி­களை தங்­களின் கட்­டுப்­பாட்­டி­லேயே இவர்கள் வைத்­தி­ருந்­தனர். ஆனால் அவர்­களில் பலர் எங்கே? சிறை­களில் தடுத்து வைத்­த­வர்­களை விடு­விக்­க­வில்லை. சிறையில் உள்­ளவர்க­ளை­யா­வது நாம் மீட்க வேண்டும் என பல போராட்­டங்களை நடத்­தினோம்.

ஆனால் இவர்­களும் தென்­னி­லங்கை அர­சி­யல்வா­தி­களும் கொஞ்சம் கூட இரங்­க­வில்லை.

கடந்த காலங்­களில் அர­சுடன் இணைந்து எமது பிள்­ளை­களை கடத்­திய டக்ளஸ், வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் தரப்­புகள் மீண்டும் கோத்­த­பா­ய­வுடன் இணைந்து தமிழர்களை மேலும் நசுக்ககங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

அவர்களின் குணத்தை மாற்ற முடியாது. ஆனால் தேர்தலில் எமது தமிழ் தலைமை தவறுவிட்டால் நாம் தட் டிக் கேட்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27