இலங்கை வர­லாற்றில் ஆட்­சியிலிருந்த அனைத்து அர­சாங்­கங்­களும் மலை­யகம், வடக்கு, கிழக்கு மற்றும் தென்­னி­லங்கை வாழ் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­ய­தா­கவோ அல்லது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­கப்­பெற்றுக் கொடுத்ததாகவோ சரித்­திரம் இல்லை என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதித் தலை­வரும், விசேட பிர­தே­சங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

கொட்­ட­கலை கொமர்ஷல் பகு­தியில் நேற்றுக் காலை சிவன் ஆல­யத்தில் டிக்­கோயா தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு உலக சைவ திருச்­ச­பையின் ஏற்­பாட்டில் சிவ­லிங்க சிலை வழங்கி வைக்­கப்­பட்­டது.

அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன், உலக சைவ திருச்­ச­பையின் தலை­வரும், கனடா பெரிய சிவன் ஆல­யத்தின் ஸ்தாப­க­ரு­மான அடியார் விபு­லா­னந்தா மற்றும் பாட­சாலை அதிபர் என பலரும் கலந்து கொண்ட இந்­நி­கழ்வில் அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டின் வர­லாற்றில் கடந்த 70 வருட கால­மாக மாறி­மாறி வரு­கின்ற அர­சாங்­கங்கள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிலை­யான உறு­தி­யான ஒரு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுத்­த­தாக சரித்­திரம் இல்லை.

ஆகவே தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் என்று நினைத்து வாக்­க­ளிப்­ப­தை­விட இந்­நாட்டில் ஒரு அர­சாங்கம் வர வேண்டும் என நினைத்து தான் வாக்­க­ளிக்க வேண்­டிய ஒரு சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். அதில் ஓர­ளவு தமிழ் மக்­களை நிம்­ம­தி­யாக வாழ­வைக்கக் கூடிய ஒரு அர­சாங்­கத்தை நாம் தெரி­வு­செய்ய வேண்டும். அதில் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் வரு­கையை வைத்து தான் தெரி­வு­செய்ய வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கையை நாம் முன்­னெ­டுக்க வேண்டும் என்றார்.