டான்சில் எனப்படும் அடிநா சதை என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 4

20 Aug, 2019 | 08:04 PM
image

அடிநா சதை எனப்படும் டான்சில் ஒவ்வொருவருக்கும் தொண்டையின் இரண்டு பகுதிகளிலும் அமைந்திருக்கும். இந்த சதையை வயிற்றின் காவலாளி என்றும், உடலின் காவலாளி என்றும் மருத்துவத் துறையினர் குறிப்பிடுவார்கள். 

ஏனெனில் நீங்கள் சாப்பிடும் உணவு, திரவம் என எதுவாக இருந்தாலும் முதலில் அதன் சுவையை இந்த டான்சில் எனப்படும் அடிநாச் சதை அறிந்து கொண்டு, அதை பற்றிய தகவலை மூளைக்கு தெரிவித்து, மூளையின் சமிக்ஞை கிடைத்த பிறகே, அதனைத் தொண்டை வழியாக இரைப்பைக்கு அனுப்புகிறது. 

உங்கள் தொண்டை பகுதியில் அமைந்திருக்கும் டான்சில் எனப்படும் இந்த உறுப்பு, பாக்டீரியாக்களை இனம் கண்டு, அதனை அழிப்பதற்கான தூண்டுதல் பணியையும் செய்கிறது. அத்துடன் உங்களுக்கு தேவையான நோயெதிர்ப்பு ஆற்றலை உற்பத்திச் செய்யும் உறுப்பாகவும் இவை திகழ்கின்றன.

நாம் சுவாசிக்க கூடிய அசுத்த காற்று. நாம் சாப்பிடும் ஒவ்வாத உணவுகள், காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல் போன்றவற்றால் தொண்டை பகுதியில் உள்ள டான்சில் பகுதி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் இந்தப் பகுதியில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால், உடலில் காய்ச்சல் உள்ளிட்ட ஆரோக்கிய பாதிப்பும் உருவாகிறது.

டான்சிலிட்டீஸ் என்ற  இத்தகைய பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டால், அவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு கேடு உருவாகும். சிலருக்கு அவர்களின் சிறுநீரகமும் பாதிக்கப்படக்கூடும். டான்சிலிட்டீஸ் பாதிப்பு அதிகமாக இருந்தால், அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி விடுகிறார்கள். இதற்காக நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துவிடுமோ என கவலைக்கொள்ளவேண்டம். அந்த பணியை அடினாய்டு எனப்படும் மாற்று உறுப்பு மேற்கொள்ளும்.

டொக்டர் கணபதி.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04