(நா.தனுஜா)

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்தியிருக்கும் கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள், இந்நியமனம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நலிவடையச் செய்வதாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. 

Image result for canada and german png

லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து சர்வதேச, உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகள் பலவும் தமது கண்டங்களை வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள கனேடிய தூதரகம் வெகுவாக அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் கவலை தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒருபகுதியை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியிருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட், 'உண்மையிலேயே இவ்விடயம் மிகுந்த அவதானத்திற்குரியது' என்றும் பதிவிட்டிருக்கிறார்.