இலங்கையின் புதிய இராணுவதளபதி தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவில் வெளிநாட்டு தூதுவர்களை தலையிடவேண்டாம் என  வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதிய இராணுவதளபதியை நியமிக்கும் முடிவு இறைமையுள்ள இலங்கையின் ஜனாதிபதி எடுத்த முடிவு என வெளிவிவகார அமைச்சு எடுத்த முடிவு என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொதுச்சேவை பதவி உயர்வுகளில் வெளிநாட்டு தூதுவர்கள் தலையிடுவது தேவையற்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு அமெரிக்க தூதரகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சு இதனை வெளியிட்டுள்ளது.