வெள்ளை வேனில் யுவதி கடத்தல் முயற்சி முறியடிப்பு ; 11 பேர் கைது

Published By: Digital Desk 4

20 Aug, 2019 | 10:23 PM
image

வவுனியா வடக்கு, காஞ்சிராமோட்டை பகுதியில்  17 வயது யுவதி ஒருவரை கடத்திச் சென்ற 11 பேரை கிராம மக்களின் உதவியுடன் நேற்று (19.08) இரவு 12.30 மணியளவில் கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி உட்பட அவரது குடும்பத்தினர் கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வசித்து வந்துள்ளதுடன் மூன்று வருடங்களுக்கு முன்னர் வவுனியா வடக்கு காஞ்சிராமோட்டை, நாவலர் பாம் பகுதியில் மீள் குடியேறியுள்ளனர். 

இந்த நிலையில் நேற்றிரவு (19.08) 11 மணியளவில் திடீரென வெள்ளை ஹயஸ் ரக வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளில் வந்த சந்தேக நபர்கள் யுவதியை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர்.

17 வயதான யுவதியை வேனில் ஏற்றிக் கடத்திச் சென்ற போது, உடனடியாக செயற்பட்ட கிராமவாசிகள் வேனை பின்தொடர்ந்து சென்றதுடன், புளியங்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட புளியங்குளம் பொலிசார் கிராம மக்களுடன் இணைந்து வாகனத்தை மடக்கிப் பிடித்து யுவதியை மீட்டதுடன், வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளில் இருந்த 10 பேரையும், இக் கடத்தலுக்கு உடந்தையாக செயற்பட்ட சாரதியையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட போது குறித்த நபர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் மீது மக்கள் தாக்க முயற்சித்ததுடன் வாகனத்தையும் தாக்க முயற்சித்தனர். இருப்பினும் பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தினர்.

யுவதியை கடத்திச் செல்ல முயற்சித்தவர்களின் பிரதான சந்தேக நபர், யுவதியின் வீட்டை நிர்மாணித்த மேசன் பாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் வவுனியா ஆச்சிபுரம் பகுதியைச்  சேர்ந்தவர்கள் எனவும், கடத்தல் சந்தேக நபர்களில் ஓருவர் குறித்த யுவதியை காதலித்துள்ளார் எனவும் தெரிவித்ததுடன், காதல் விவகாரமே கடத்தலுக்கு காரணம் என புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் குறித்த நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ;...

2025-02-11 15:15:10
news-image

இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல வலயக்கல்வி பிரிவில்...

2025-02-11 15:12:30
news-image

போதைப்பொருள் பாவனை ; 17 பொலிஸ்...

2025-02-11 15:08:34
news-image

காலி - மாத்தறை பிரதான வீதியில்...

2025-02-11 14:27:46
news-image

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்...

2025-02-11 14:50:46
news-image

மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-02-11 14:22:52
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்...

2025-02-11 14:22:29
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின்...

2025-02-11 14:21:18