மல்வானையில் வாள்களுடன் கொள்ளையிடவந்த கும்பல் மடக்கிப் பிடிப்பு

Published By: R. Kalaichelvan

20 Aug, 2019 | 04:30 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மல்வானை உளஹிட்டிவல பகுதியிலுள்ள பிரபல (முஸ்லிம்) வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்க வாள்கள் சகிதம் வந்த கும்பலொன்றை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

சுமார் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலில் 3 பேர் மாத்திரமே மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று இரவு 9.30 மணியவில் வீட்டின் மதில் வழியாக நுழைந்த இந்த கொள்ளையர்கள், நுழைவாயில் காவலில் இருந்தவரை மடக்கிப்பிடித்து அவரின் கை, வாய்யை கட்டிவிட்டு அவரின் கழுத்தில் கத்தியை வைத்தவாறு வீட்டின் பிரதான கதவை தட்டுமாறு தெரிவித்துள்ளனர். காவல் காரர் கதவை தட்டியபோது வீட்டுக்குள் இருந்தவர்கள் அவரின் குரல் சத்தத்தை மதித்து ஜன்னல் வழியாக என்ன விடயம் என விசாரித்துள்ளனர். 

இருந்தபோதும் அவரினால் வாயை திறந்து கதைக்க முடியாததை உணர்ந்த வீட்டில் இருந்த பெண்ணொருவர் கதவை திறந்துள்ளார்.

உடனே கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 3பெண்களை மடக்கிப்பிடித்து அவர்களை கட்டிவீட்டு வர்த்தகரின் அறையை காட்டுமாறு தெரிவித்துள்ளனர். இதன்போது  வீட்டின் மேல்மாடியின் அறையிலிருந்த வர்த்தகரின் மகன் சம்பவத்தை அவதானித்ததும் உடனடியாக தான் இருந்த அறையை மூடிவிட்டு வீட்டுக்கூரையின் மேல் ஏறி வட்சப் மூலம் ஊராருக்கு தகவலை பகிர்ந்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் வீட்டை சுற்றி முற்றுகையிட்ட வேளையில், கொள்ளையர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர். இதன்போது இருவர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.

ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச்சென்றவர்களை  பொது மக்கள் தேடும்போது, குறித்த கொள்ளை சம்பவத்திற்கு ஒத்து பார்த்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளார். இதன்போது பொலிஸாரும் ஸ்தலத்துக்கு வருகை தந்திருந்தனர். இவ்வாறு பிடிபட்ட மூவரையும் பொது மக்கள் பொலிஸாரிடம் கையளித்துள்ளர். தொம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குறித்த கொள்ளையர்கள் சில தினங்களாக வர்த்தகரின் வீட்டார்கள் இரவில் வீட்டுக்கு வரும் நேரம், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் திட்டமிட்டே வந்துள்ளனர். இருந்தபோதும் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அந்த பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள் அல்ல. அதனால் அவர்களுக்கு தப்பிச்செல்ல சரியான வழி தெரியாமல் அங்கு மறைந்திருந்துள்ளனர்.  வீட்டை சுற்றிவளைத்திருந்த பொது மக்கள் தேடல் நடவடிக்கையை மேற்கொண்டபோதே அவர்களின் கைகளில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38