காசல் ரீ நீர்த்தேக்கதிற்குள் ஆண் சிசுவை வீசிய தாய் ஹட்டன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் – டிக்கோயா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு வனராஜா பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ள நிலையில்,  அந்த சிசுவை தாய் டிக்கோயா காசல் ரீ நீர்த்தேக்கத்தில் வீசியுள்ளார்.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிசு, காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிக்க சென்றவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து  சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள சிசுவின் தாய் டிக்கோயா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.