மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.

மரண தண்டனையை ரத்து செய்வது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் மேற்படி மனுக்கள் அரசியலமைப்பிற்கு இயைபானதா என அறிவிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றதிற்கு கிடையாது எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் அறிவிப்பின் போதே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில்  பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இந்த அறிவிப்பை விடுத்தார்.

அரசியலமைப்பின் 121 (1) சரத்தின் பிரகாரம் மரண தண்டனை ரத்து செய்வது தொடர்பில் சட்டமூலம் ஒன்று நீதிமன்ற மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புபட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 121 சரத்தின் பிரகாரம் ஏதும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக என அறிவிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு கிடையாது. எனவே இவ்வாறு தொடுக்கப்பட்டுள்ள மூன்று மனுக்களையும் நிராகரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது எனவும் பிரதிசபாநாயகர் அறிவித்தார். 

அத்துடன் அரசியலமைப்பின் 121 (1) விடுமுறை சட்டமூலம் குறித்த இரண்டு நீதிமன்ற மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தீர்மானத்தையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது அரசியல் அமைப்பிற்கு அமைவான ஒன்றேன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து சட்ட தெளிவுகளை முன்வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. என்பதையும் அவர் சபையில் வலியுறுத்தினார்.