இந்தியாவின்,  தமிழகத்தில் சேர்ந்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்கள் கடிதத்தில் எழுதி வைத்திருந்த உருக்கமான வரிகள் குறித்து தெரியவந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் ஆர்.ஜெயபாலன்(38). ஒடிசா மாநிலத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளாார்.

இவரது மனைவி மாலினி (35). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. ஆனர் இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களாக அவர்கள் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்த சூழலில் வீட்டிலிருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது ஜெயபாலனும், மாலினியும்
நிர்வாண நிலையில் இறந்து கிடந்தனர். இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில் உடலை கைப்பற்றிய பொலிசார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையில் ஜெயபாலன் எழுதிய 4 பக்க கடிதம் வீட்டில் கிடைத்துள்ளது. அதில், தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் குழந்தை இல்லாத ஏக்கத்தால் தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.

மேலும் தங்கள் பெற்றோர், இந்த முடிவுக்காகத் தங்களை மன்னிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.