(செ.தேன்மொழி)

சியம்பலான்டுவ பகுதியில் நபரொருவர் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாக சியம்பலான்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சியம்பலான்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுகொல்லவத்த - தொம்பகஹவெல பகுதியில் நேற்று இரவு நபரொருவர் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது தொம்பகஹவெல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த நபருக்கும் பிரிதொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே மேற்படி மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன்போது பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸார்  இன்று காலை குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்கா மொணராகலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.  சியம்பலான்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.