இந்­திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்­குதல் நடத்த பயங்­க­ர­வா­திகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரி­வித்­ததை அடுத்து பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதாக இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

இந்­திய கிரிக்கெட் அணி, மேற்­கிந்­தியத் தீவு­களில் விளை­யாடி வரு­கின்­றது. இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான டெஸ்ட் தொடர் நாளை மறு­தினம் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இந்­நி­லையில், அங்­கி­ருக்கும் இந்­திய அணி மீது பயங்­க­ர­வா­திகள் தாக்­குதல் நடத்தவிருப்­ப­தாக, தங்­க­ளுக்கு மின்­னஞ்சல் வந்­துள்­ளது என்று பாகிஸ்தான் கிரிக் கெட் சபை தெரி­வித்­துள்­ள­தாக இந்­தியச் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

எந்தப் பயங்­க­ர­வாத இயக்­கத்தின் பெயரும் இல்­லாமல் இந்த மிரட்டல் மின்­னஞ்சல் வந்­துள்­ளது என்று தெரி­வித்­துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அந்த னஞ்சலை, சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லுக்கு அனுப்­பி­யுள்­ளது. இந்­திய கிரிக்கெட் சபைக்கும் அங்­கி­ருந்து, அந்த மின்­னஞ்சல் பகி­ரப்­பட்­டுள்­ளது. இதனையடுத்து பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.