பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் சடலத்தை குளக்கரையொன்றிலிருந்து பொலிஸார் நேற்று (19.08.2019) மீட்டுள்ளனர்.

குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண், அச்சிசுவினை வீசிவிட்டு தப்பி சென்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.