தமிழ்­பேசும் சிறு­பான்மைச் சமூ­கமே எமது நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வர­வேண்­டி­யவர் யார் என்­பதை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருந்­து­வ­ரு­கி­றது. எனவே ஆறு­முகன் தொண்­டமான், இரா­தா­கி­ருஷ்ணன், திகாம்­பரம், மனோ­க­ணேசன், ரிஷாத் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம் போன்ற அனைத்து சிறு­பான்மைச் சமூக அர­சியல் தலை­மை­களும் ஒன்­றி­ணைந்து மீண்டும் எமது மக்­களின் சக்­தியை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்று பெருந்­தோட்ட கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரி­வித்­துள்ளார்.

ஆரம்ப கைத்­தொழில் மற்றும் சமூக வலு­வூட்டல் அமைச்சின் பங்­க­ளிப்­புடன் பெருந்­தோட்ட கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்­சினால் ஹப்­புத்­தளை இந்து கலா­சார மண்­ட­பத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நட­மாடும் சேவை நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மேலும் அவர் கூறு­கையில்,

தொடர்ச்­சி­யாக நாட்டில் தேர்­தல்கள் வர­வி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதி தேர்தல், பாரா­ளு­மன்ற தேர்தல், மாகா­ண­சபை தேர்­தல்கள் என நாம் அடுத்­த­டுத்து தேர்­தல்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு முகம் கொடுக்­க­வி­ருக்­கின்ற தேர்­தல்­களில் எமது சிறு­பான்மை மக்­களின் பேரம்­பேசும் சக்­தி­யினை வெளிக்­கா­ட்ட வேண்டும். 

ஜனா­தி­பதி தேர்­தலில் சிறு­பான்­மை­யின அர­சி­யல்­வா­திகள் அனை­வரும் வேறு­பட்ட கருத்­துக்­களை முன்­வைக்­காது தொழிற்­சங்க பாகு­பா­டின்றி ஒன்­றி­ணைந்த குறிக்­கோ­ளுடன் ஒற்­று­மை­யாக இணைந்து செயற்­ப­டு­வதன் மூலம் எமது உரி­மை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான சக்­தி­யினை வெளிக்­காட்ட முடியும். அத்­துடன் மீண்டும் இன­வாத அர­சி­ய­லுக்கு துணை­போ­காது சிறு­பான்மை மக்­களின் தேவை­களை புரிந்து அவர்­களின் தேவை­யை நிறை­வேற்றும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கே எமது ஆத­ரவு வழங்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­து­கிறேன். விஷே­ட­மாக பெருந்­தோட்ட மக்­களின் தேவை­களை இனங்­கண்டு அவற்­றை சிறந்த முறையில் நிறை­வேற்றும் வகையில் எம்­மோடு கைகோர்க்கும் ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ருக்கே எமது பேரம்­பேசும் சக்­தி­யினை நாம் வெளிக்­காட்ட வேண்டும்.

 தற்­போது நாட்டில் காணப்­ப­டு­கின்ற அர­சியல் சூழ்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் யாரென இன்னும் உத்­தி­யோகபூர்­வ­மாக அறி­விக்­கவில்லை. இருப்­பினும் பிர­தித்­த­லைவர் சஜித் பிரே­ம­தாச அண்­மையில் பது­ளைக்கு வரு­கை­ தந்த சந்­தர்ப்­பத்தில் எமது பெருந்­தோட்ட சொந்­தங்கள் அலை­க­ட­லென திரண்டு எமது சக்­தியை நாம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தோம். பெருந்­தோட்ட சொந்­தங்கள் என்றும் ஐக்­கிய தேசிய கட்­சி­யு­டன் இருக்­கின்­றனர். 

அதை­வி­டுத்து இன­வாத அர­சி­யல்­வா­திக்கு என்­றுமே பெருந்­தோட்ட மக்­களின் வாக்கு வழங்­கப்­ப­ட­மாட்­டாது. தமிழ்­மொழி பேசும் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் இல்­லாமல் எவரும் ஜனா­தி­பதி ஆகி­விட முடி­யாது. எமது நாட்டில் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் சக்தி சிறு­பான்மைச் சமூகம் மாத்­தி­ரமே ஆகும். ஆரம்ப காலம்­தொட்டு இந்­நாட்டில் தெரிவு செய்­யப்­பட்ட அனைத்து ஜனா­தி­ப­தி­களும் சிறு­பான்மை மக்­களின்  வாக்­கு­க­ளி­னாலேயே வெற்­றி­பெற்­றனர். 

எனவே நாம் ஒன்­றி­ணைய வேண்டும். ஆறு­முகன் தொண்­டமான், இரா­தா­கி­ருஷ்ணன், திகாம்­பரம், மனோ­க­ணேசன், வடிவேல் சுரேஷ், ரிஷாத் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம் போன்ற அனைத்து தமிழ்­மொழி பேசும் சிறு­பான்மை அர­சி­யல்­வா­தி­களும் ஒன்­றி­ணைந்து எமது பேரம் பேசும் சக்தியைக் கொண்டு எமது தொப்புள்கொடி உறவுகளின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். இதுவே சிறந்த தருணம். 

நாம் ஒற்றுமையுடன் செயற்படுவதே எமது சமூகத்திற்கு சிறந்த பாதுகாப்பு. இனவாத அரசியல்வாதிகளிடமிருந்து எமது சொந்தங்களை பாதுகாக்க வேண்டிய பெரும்பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.